விண்ணைப்பிழந்த அரோகரா கோஷம்.. கழுகு காட்சிகள்

16 ஆண்டுகளுக்குப் பின் திருச்செந்தூரில் கும்பாபிஷேகம் இன்று (ஜூலை 7) நடைபெற்றது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியை நேரில் காண 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் வருகை & பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு இருந்தது. தற்போது கோவிலின் கழுகு காட்சிகள் வெளியாகியுள்ளது. அரோகரா கோஷத்துடன் கும்பாபிஷேகமும் நடந்து முடிந்துள்ளது.
Tags :