பாம்பனில் 300 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி

by Editor / 23-01-2022 11:57:21pm
பாம்பனில் 300 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி

பாம்பன் ரயில் துாக்கு பாலம், உப்பு காற்றில் துருப்பிடிக்காத வகையில் ரசாயனம் கலந்த வர்ணம் பூசும் பணி துவங்கியது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் ரயில் பாலத்தின் நடுவில் உள்ள துாக்கு பாலம் அடிக்கடி பலவீனமானதால், 300 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி நடக்கிறது. தற்போதைய துாக்கு பாலத்தில் சேதமடைந்த இரும்பு துாண்கள், 'பிளேட்'களை அகற்றி ரசாயனம் கலந்த வர்ணம் பூசுவது வழக்கம். சமீபத்தில், துாக்கு பாலத்தில் புதிய பிளேட் பொருத்தினர்.இதை தொடர்ந்து, நேற்று முதல் ரசாயனம் கலந்த அலுமினியம் வர்ணம் பூசும் பணியில் ரயில்வே ஊழியர்கள்ஈடுபட்டுள்ளனர்.

பாம்பனில் 300 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி
 

Tags : Construction of a new railway bridge at Pamban at a cost of 300 crore rupees

Share via