அய்யப்பன் கோவிலுக்கு சென்று திரும்பிய வேன் கவிழ்ந்தது

by Editor / 13-12-2022 11:03:34pm
அய்யப்பன் கோவிலுக்கு சென்று திரும்பிய வேன்  கவிழ்ந்தது

கேரளமாநிலத்தில் புகழ் பெற்ற ஐயப்பன் கோவிலில் மண்டலபூஜைக்காக நடைதிறக்கபட்டுள்ளது.இதனை தொடர்ந்துஉலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மாலை அணிந்து விரதமிருந்து இருமுடிக்கட்டி தினமும் 60 முதல் 80ஆயிரம் பக்தர்கள் வாகனங்களில் சபரிமலைநோக்கிவந்த வண்ணம் உள்ளனர்.சபரிமலையில் தரிசனம் முடித்துவிட்டு பக்தர்கள் குற்றாலத்தில் குளித்துவிட்டு திருச்செந்தூர்,கன்னியாகுமரி ஆகிய பாக்சுதிக்ளுக்கு சென்று யூர்திரும்புவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.இதன் தொடர்ச்சியாக இன்று இரவு  சென்னை கேளம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜயப்ப பக்தர்கள் 2 குழந்தைகள் , 10 பெரியவர்கள் என 12 பேர் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வாகனத்தில் வந்தபோது  4 வழிச்சாலை பணிகள் நடைபெற்றுவரும் பகுதியில் முன்னறிவிப்பு பலகைகள்,உள்ளிட்ட எந்த அறிவிப்பு பலகைகளும் வைக்காததால் சபரி மலை சென்று வந்த இந்த ஜயப்ப பக்தர்கள் வேன் பணிகள் நடைபெறும் பகுதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.இதில் பயணித்த அனைவரும் காயமடைந்தனர்.இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via