அரசு துவக்கப் பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட 15 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்

சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகில் கல்லராதினிப்பட்டியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 60 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள். இன்று மதிய உணவு உட்கொண்டதில் 15 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில் பள்ளிக்கு அருகில் உள்ள கீழப்பூங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக 20 மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து தகவலறிந்து மாணவர்களின் பெற்றோர்கள் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பதற்றத்துடன் கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைநடத்தினர்.
Tags :