கல்லூரி மாணவி தற்கொலை காதலன் கைது.

by Editor / 07-04-2022 11:17:39pm
 கல்லூரி மாணவி தற்கொலை காதலன் கைது.

திருவாரூரைச் சேர்ந்த இரண்டாமாண்டு கல்லூரி மாணவி கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சாவித் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதில் மாணவி மூன்று மாத கர்ப்பம் ஆன நிலையில்திருமணம் செய்து கொள்வதாக சாவித் கல்லூரி மாணவியை ஏமாற்றியுள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் 

மூன்று மாத கர்ப்பம் ஆன நிலையில் கல்லூரி மாணவியை ஏமாற்றிவந்துள்ளார்.இதன் தொடர்ச்சியாக மாணவி  விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் சாவித் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சாவித்தை காவல்துறையினர்கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

Tags :

Share via

More stories