இபிஎஸ் முதல்வராக வேண்டி அக்னிசட்டி ஏந்திய பிரபல நடிகர்..கஞ்சா கருப்பு.

by Staff / 08-04-2023 01:49:27pm
இபிஎஸ் முதல்வராக வேண்டி அக்னிசட்டி ஏந்திய பிரபல நடிகர்..கஞ்சா கருப்பு.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன் சிவகங்கையில் நடிகர் கஞ்சா கருப்பு செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது "தற்போது அதிமுகவில் நடப்பது அங்காளி பங்காளி சண்டை. இது கூடிய விரைவில் முடிவுக்கு வரும் என அதிமுக உறுப்பினரும், நடிகருமான கஞ்சா கருப்பு தெரிவித்தார்.மேலும் இபிஎஸ் பொதுச்செயலாளராக பதவியேற்றதற்கும் அவர் முதல்வராக வேண்டும் என்றும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தீச்சட்டி எடுக்க இருக்கிறேன். கூடிய விரைவில் நல்லாட்சி அமையும் என்று கஞ்சா கருப்பு தெரிவித்தார். இந்நிலையில் இபிஎஸ் முதலமைச்சராக வேண்டும் என நடிகர் கஞ்சா கருப்பு அக்னிசட்டி ஏந்தி நேர்த்திக் கடன் செலுத்தினார்.திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் வருகை தந்த அவர், அங்கிருக்கும் தெப்பக் குளத்தில் இருந்து கோவிலுக்கு அக்னி சட்டி ஏந்தி வந்தார். அவரது மனைவி பால்குடம் சுமந்தும், மகன் வேப்பிலை ஆடை அணிந்தும் கோவிலை சுற்றி வந்து வழிபாடு செய்தனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via

More stories