ஆட்டோ மீது மோதிய லாரி ஒருவர் பலி

by Staff / 21-03-2023 04:31:51pm
ஆட்டோ மீது மோதிய லாரி ஒருவர் பலி

கோவை மாவட்டம் சூலூர் எல்என்டி பைபாஸ் சாலையில் நேற்று மாலை 4 மணிக்கு நீலாம்பூர் டோல்கேட் வழியே கேரள பதிவு எண் கொண்டு பயணியை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது, அந்த ஆட்டோவை கேரளாவை சேர்ந்த சசிகுமார் ஓட்டியதாக தெரிகிறது, சேலம் திருப்பதியை சேர்ந்த இளம் வழுதி என்பவர் பின்னால் அமர்ந்து பயணம் செய்ததாக தெரிகிறது. அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது, ஆட்டோவை ஓட்டி வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் ஆட்டோவின் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக சூலூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via

More stories