இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொளத்தூர், விளாத்திக்குளத்தில் புதிய கல்லூரி அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

by Editor / 07-10-2021 03:46:52pm
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொளத்தூர், விளாத்திக்குளத்தில் புதிய கல்லூரி அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

கொளத்தூர், திருச்செங்கோடு, ஒட்டன்சத்திரம், விளாத்திக்குளம் ஆகிய இடங்களில் 4 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும். இதில் 4 பாடப்பிரிவுகளுடன் ஆன்மீக பாடப்பிரிவும் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.


அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:
கோவில்களில் சமஸ்கிருத பெயர்களுடன் தமிழ் பெயர்களும் சேர்ந்து இடம்பெற முதலமைச்சருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதேசுவரர் திருக்கோவில் ரூபாய் 3 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். ரூ.15 லட்சம் செலவில் திருத்தேர் மேம்படுத்தப்படும். நல்ல வடிவமைப்பில் மரத்தேர் செய்வதற்கு ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


விரைவில் பணிகள் தொடங்கும். சிதிலமடைந்த வாகனங்கள் புதுப்பிக்கப்படும். ரூபாய் 24 கோடி குளத்திற்கு செலவிடப்பட்டதாக வெளியான செய்தி தவறானது என்றும் குளத்தை சீரமைக்க நிதி ஒதுக்கவில்லை என விளக்கமளித்தார். மேலும் கோவிலின் குளம் சென்னை மாநகராட்சி 2.0 திட்டத்தின் கீழ் குளம் மேம்படுத்தப்படும். கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்கப்படும், நிலுவையில் உள்ள வாடகை தொகை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


திருக்கோயிலில் பணியாளர் பற்றாக்குறையை போக்குவதற்காக பணியாளர்கள் நிரப்பப்படுவர். கோயிலின் பின்புறமுள்ள அர்ச்சகர் வசிக்கும் இல்லங்கள், நீத்தார் நினைவுக் கூடம் ஆகிய இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் படியும், சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.


தமிழ்நாட்டில் உள்ள சில கோவில்கள் பெயர்கள் சமஸ்கிருத பெயரில் உள்ளது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வியெழுப்பியதற்கு இதுபோன்ற வேண்டுகோள்கள் பல இடங்களில் இருந்து வருகிறது. சில கோவில்களுக்கு தமிழ் மற்றும் சம்ஸ்கிருத பெயர்களில் உள்ளன. இது குறித்து தீர ஆய்வு செய்து, முதலமைச்சர் அனுமதியுடன் இரண்டு பெயர்களிலும் கோவில்கள் பெயர்கள் அழைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5 கல்லூரிகள் இயங்கி வருகிறது. புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டபேரவையில் அறிவித்துள்ளோம். இதில் 4 கல்லூரிக்கு உயர்கல்வி துறையிடம் அனுமதி பெற்றுள்ளோம்.


கல்லூரிகளை இந்த ஆண்டு திறக்க உள்ளோம். அதனை தொடர்ந்து சென்னை கொளத்தூர் எவர் எக்ஸல் பிளாக்கில் ஸ்ரீ கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பரமத்திவேலூர் தேசிய நெடுஞ்சாலையில் அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் அம்பளிக்கை என்ற தனியார் இடத்தில் பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயரில் புதிய கல்லூரிகள் தொடங்கப்படுகிறது.


தனியார் கட்டிடத்தில் அனுமதி பெற்று வாடகையில் கல்லூரியை நடத்த உள்ளோம். சென்னையில் 2 இடங்களில் கல்லூரி தொடங்கப்படும் என அறிவித்துள்ளோம். சென்னை கொளத்தூரில் கல்லூரி தொடங்க பூம்புகார் நகரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தொடங்கப்படும் கல்லூரிகளில் ஆன்மீகம் சார்ந்த பாடமும் நடத்தப்படும். சென்னையில் இருக்கின்ற தனியார் கல்லூரிக்கு போட்டிபோடும் விதத்தில் இந்த கல்லூரிகள் நடைபெறும். என அமைச்சர் தெரிவித்தார்.

 

Tags :

Share via