பிரதமர் மோடி இன்று தமிழக பிரசித்திபெற்ற ஆலயங்களில் தரிசனம் செய்கிறார்.
3 நாள் பயணமாக தமிழ்நாடு வருகை தந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் இன்று வழிபாடு மேற்கொள்ள உள்ளார். காலை 11 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, பிற்பகல் 2 மணிக்கு ராமேஸ்வரம் சென்று அங்கு ராமநாதசுவாமி கோவிலில் வழிபாடு செய்வார். தொடர்ந்து, இன்று இரவு அங்கேயே தங்கவுள்ளார். அதே போல், நாளைய தினம் அரிச்சல் முனை, கோதண்டராமசாமி கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்கிறார். தொடர்ந்து 21ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து புனிதநீர் எடுத்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமானநிலையம் வருகை தருகிறார். தொடர்ந்து மதுரையில் இருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் திங்கள்கிழமை அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு, ஆன்மிக பயணமாக தமிழ்நாட்டிற்கு பிரதமர் வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags : பிரதமர் மோடி இன்று தமிழக பிரசித்திபெற்ற ஆலயங்களில் தரிசனம் செய்கிறார்.