உக்ரைனை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது

by Staff / 05-05-2022 02:35:42pm
உக்ரைனை கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது

 உக்ரைனில் இராணுவம் அல்லாத இலக்குகள் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில் உக்ரைனை  கைப்பற்றும் ரஷ்யாவின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டு இருப்பதால் பள்ளிகள் மருத்துவமனைகள் குடியிருப்புகள் போக்குவரத்து மையங்கள் உள்ளிட்ட இராணுவ இலக்குகளின் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைகள் மூலம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறியுள்ளது.கருங்கடலில் இருந்து செல்வதற்கு ஏதுவாக அதனை ஒட்டி இருக்குமாறு மரியுபோல்  உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ரஷ்யப் படைகள் தொடர்ந்து தாக்கி வருவதாகவும் உக்ரைனின் கடல்வழி போக்குவரத்து கட்டுப்படுத்தி அந்நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க ரஷ்ய முயற்சிப்பதாகவும் பிரிட்டன் குற்றம்சாட்டியுள்ளது.
 

 

Tags :

Share via