ரத்த அழுத்தம் குறைக்கும் முளைக்கீரை 

by Editor / 18-08-2021 06:25:53pm
ரத்த அழுத்தம் குறைக்கும் முளைக்கீரை 

 

கீரைத் தண்டாக வளரும் தண்டுக்கீரையின் இளஞ்செடியே முளைக் கீரையாகும். முளைக் கீரை எங்கும் தாராளமாகக் கிடைக்கும். வருடம் முழுவதும் தடையின்றி கிடைக்கும். முளைக்கீரையை விதைத்த பின்னர் 45 நாட்களில் அறுவடை செய்ய வேண்டும். அதற்கு மேல் வளர விட்டால் கீரை முதிர்ந்து தண்டு நார் பாய்ந்துவிடும். உண்ணுவதற்கு அதிகமாகப் பயன்படுத்தப்படும் கீரைகளில் முளைக்கீரையும் ஒன்று.

கீரைகளில் முளைக்கீரை தனித்துவமானது. சாதாரணமாக தெருக்களில் கூட கிடைக்கக்கூடியது. வீட்டிலும் வளர்க்கலாம். முளைக்கீரையில் 80 சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. இதுதவிர, நார்ச்சத்து, மாவுச்சத்து குறிப்பிடும் அளவுகளில் இருப்பதால், உடல் வலுவடைய உதவுகிறது. வளரும் சிறுவர்களுக்கு இந்தக் கீரையைத் தொடர்ந்து கொடுத்தால் நல்ல உடல் வளர்ச்சி உண்டாகும்.

முளைக்கீரை உணவுக்குச் சுவையூட்டுவதுடன் பசியையும் தூண்டுகிறது. முளைக்கீரையை நன்கு கழுவிச் சிறிது வெங்காயம், புளி, பச்சை மிளகாய், உப்பு ஆகியவை சேர்த்து வேக வைத்துக் கடைந்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் உட்சூடு, ரத்தக் கொதிப்பு, பித்த எரிச்சல் ஆகிய நோய்கள் குணமாகும். அதோடு கண்ணும் குளிர்ச்சியடையும். முளைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவதால், சொறி, சிரங்கு முதலிய நோய்கள் குணமாகின்றன.

ருசியின்மை குறைபாடு

புளிச்சக்கீரை, மிளகு, மஞ்சள், உப்பு மற்றும் அதனுடன் முளைக்கீரையை சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ருசியின்மை குறைபாடு நீங்கும்.

உடல் ஆரோக்கியத்திற்கு

முளைக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் உடலுக்குப் போதிய அளவில் கிடைக்கும். 40 நாட்களுக்கு குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்ல உயரமாக வளருவார்கள்.

ரத்த அழுத்தம்

முளைக்கீரைச் சாற்றில் சீரகத்தை ஊற வைத்து, உலர்த்தித்தூள் செய்து சாப்பிட்டால் பித்த நோய்கள், மயக்கம், ரத்த அழுத்தம் போன்றவை சரியாகும்.

காய்ச்சல்

முளைக்கீரையை சாப்பிட்டால் காச நோயால் ஏற்படும் காய்ச்சல் நீங்கும்.

இருமல், தொண்டைப்புண்

மூளை கீரை கண் எரிச்சல், கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். இருமல், தொண்டைப்புண் போன்றவற்றையும் குணமாக்கும்.

 

Tags :

Share via