செயற்கையாக தாகம் தணிக்கும் பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.

வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கின்றது பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி உள்ளது. வெயில் காலங்களில் அதிகமாக தண்ணீரை பருக வேண்டும். குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள் தண்ணீர் சத்து உடலில் குறையாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய இயற்கையான பழச் சாறுகளை பருக வேண்டும். இல்லை எனில், நீர் மோரை அதிக அளவில் குடிக்க வேண்டும். கிராமப்புறங்களில் பானகம் என்று சொல்லக்கூடிய கருப்புக்கட்டி, புளி, ஏலக்காய் கொண்டு செய்யப்பட்ட பானகம் அருந்துவதன் மூலம் உடல் வெப்பத்தை தணித்து கொள்ள முடியும்.
தர்பூசணி பழத்தில் எப்ப காலத்தில் நம் உடம்பிற்கு தேவையான சத்துக்கள் உள்ளன. அதனால் தர்ப்பூசணி பணத்தை கோடையில் உண்பது நல்லது.
செயற்கையாக தாகம் தணிக்கும் பானங்களை குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதில் உடம்பிற்கு ஒவ்வாத ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டு அந்த நேரத்தில் தாகத்தை தணிக்க கூடியதாக உருவாக்கப்பட்ட இருப்பதால் அவற்றை கூடுமானவரை தவிர்க்க முயற்சிக்க வேண்டும். உடலினுடைய வெப்பத்தை அதிகரிக்கும் மாதிரியான உணவுப் பொருட்களையும் இந்த கோடை வெயில் காலத்தில் எடுத்துக் கொள்வதை அறவே தவிர்க்க வேண்டும். கோழி இறைச்சி, மது, சில பழங்கள் விலக்கப்பட வேண்டியவை.
Tags :