கார் குண்டு வெடிப்பில் 15 பேர் பலி..
வடக்கு சிரியாவில் கார் குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மன்பிஜ் நகரின் புறநகர் பகுதி அருகே விவசாய தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் அருகே இருந்த காரில் குண்டு வெடித்தது. இதில் 14 பெண்கள் உள்பட 15 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்துள்ள 15 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Tags :