கடவுளை எதிர்நோக்கி காத்திருக்கக் கூடிய ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது

by Admin / 28-12-2024 01:24:48pm
 கடவுளை எதிர்நோக்கி காத்திருக்கக் கூடிய ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது

: உலகம் முழுவதும்  புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பமாக உள்ளது.ஒவ்வொரு நாட்டிலும் அதனுடைய சீதோசன நிலைக்குத் தாக 31ஆம் தேதி காலையிலிருந்து புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்குகிறது .இந்தியாவில்,2024 செவ்வாய்க்கிழமை இரவு முடிந்து புதன்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு  மக்கள் புத்தாண்டை  பட்டாசு...வெடி வெடித்து.. புத்தாடை அணிந்து வரவேற்க தயாராவார்கள்.

 இந்த புத்தாண்டு நிகழ்வு, ரோமானிய பேரரசில் கி.மு 45 லிருந்து கிர கோரியின் நாட்காட்டி அடிப்படையில் புத்தாண்டு முதல் நாள் நிகழ்வு கொண்டாடப்படுகிறது. ஜானுஸ் என்று அழைக்கப்படும் இந்த நாள் ,வாயில் கதவுகளை திறந்து வைத்து கடவுளை எதிர்நோக்கி காத்திருக்கக் கூடிய ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது..

இயேசு கிறிஸ்துவின் விருத்த சேதன விழாவும் ஆங்கிலிக்கன், லுத்தரன் தேவாலயங்களில் அந்தப் பிரிவினர்கள் கொண்டாடும் கொண்டாட்ட நாளாகவும் இது அறியப்படுகிறது.

உலகமெல்லாம் இருக்கின்ற மக்கள் பொது விடுமுறையோடு மனமகிழ்ச்சியோடு வரும் நாளெல்லாம் வசந்த நாட்களாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தித்து இந்த ஜனவரி ஒன்றை வரவேற்கின்ற நாள்தான் புத்தாண்டு.

 

Tags :

Share via