கிரிவலப்பாதையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்துதற்கொலை.

by Editor / 28-12-2024 03:40:54pm
 கிரிவலப்பாதையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்துதற்கொலை.

திருவண்ணாமலை அண்ணாமலையார்  கோவிலில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி நாட்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விடுமுறை தினங்களிலும் அண்ணாமலையாரை வழிபட்டு பின்னர் 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கிரிவல பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருவது வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் பெரும்பாலானவர்கள்  வாடகை வீடுகளை காலி செய்துவிட்டு அதன் உரிமையாளர்கள் உரிய அனுமதி பெறாமல் ஹவுஸ் ஸ்டே வாக வீடுகளை வாடகை விட்டு அதிக வருமானம் சம்பாதித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ரீ மகாகால வியாசர்,அவரது  மனைவி ருக்மணிபிரியா, மகள் ஜலந்தரி, மகன் முகுந்த்ஆகாஷ்குமார், என்கிற 4பேர் தங்கி இருந்த நிலையில் இன்று அதிகாலையில் விடுதியின் உரிமையாளர் கௌதம் என்பவர் உள்ளே சென்று பார்த்தபோது நான்கு பேர் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது 4 பெரும் விஷமருந்தி இறந்தது தெரியவந்ததைத்தொடர்ந்துஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர்   உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில் ஸ்ரீ மகா கால வியாசகர் என்பவர் தீவிர சிவ பக்தராக இருந்து வருகிறார் எனவும், இவர் குடும்பத்துடன் மாதம்த்தோறும் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து பௌர்ணமி நாட்களில் கிரிவலம் மேற்கொண்டு இரண்டு நாட்கள் திருவண்ணாமலையில் தங்கி விட்டு செல்வதாகவும், தற்போது கார்த்திகை தீபத்திற்கு வந்து சென்னைக்கு சென்றுஅந்த குடும்பத்தினர்  நேற்று நண்பகல்  திருவண்ணாமலைக்கு வந்து நேற்று இரவு குடும்பத்துடன் இறைவனடி செல்ல போவதாக தெரிவித்து நான்கு பேரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வீடியோ பதிவு செய்தும் மற்றும் அவர்களது கைப்பட கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறையினர் தரப்பில் செய்தியாளர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

 

Tags :  கிரிவலப்பாதையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்துதற்கொலை.

Share via