கோவையில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

by Staff / 12-01-2023 01:09:37pm
கோவையில் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் சூலூர் கலங்கள் சாலை சந்திப்பில் தமிழக ஆளுநர் ஆர். என் ரவியின் சட்டப்பேரவை நடவடிக்கைகளை கண்டித்து, சூலூரில் திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியா கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தவ்ஹீத் ஜமாஅத், காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழக ஆளுநர் ஆர். என் ரவி தமிழக அரசுக்கு எதிராகவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி அவரை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo