இந்தியா ஏ ஐஇன்பேக்ட் உச்சி மாநாடு நிறைவு.

by Admin / 21-02-2026 12:47:47am
இந்தியா ஏ ஐஇன்பேக்ட் உச்சி மாநாடு நிறைவு.

புதுடில்லி பாரத் மண்டபத்தில் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தியா ஏ ஐஇன்பேக்ட் உச்சி மாநாடு நிறைவு பெற்றது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அமெரிக்க தூதர் சேர் ஜியோ கோர் மற்றும் அமெரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் ஜேக்கப் ஹெல் பெர்க் முன்னிலையில் கையெழுத்தானது. செயற்கை நுண்ணறிவு மற்றும் செமி கண்டக்டர் தயாரிப்பிற்கு தேவையான முக்கியமான கனிமங்களின் விநியோக சங்கிலியை பாதுகாப்பது மற்றும் சீனாவை சார்ந்திருப்பதை குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். ஆஸ்திரேலியா, ஜப்பான் ,தென்கொரியா , இங்கிலாந்து, இஸ்ரேல் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட 11 நாடுகளுடன் 12 -வது நாடாக இந்தியா இதில் இணைந்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் செமி கண்டக்டர் மிஷன் மற்றும் ஏ.ஐ உள் கட்டமைப்பு மேம்பாட்டிற்கு அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து பெரும் முதலீடுகள் ஈர்ப்பதற்கு உதவும்.

இந்தியா ஏ ஐஇன்பேக்ட் உச்சி மாநாடு நிறைவு.
 

Tags :

Share via
Logo