தமிழக அரசு பெரிதும் உறுதுணையாக இருந்தது... தமிழக வீராங்கனை பவானி தேவி பேட்டி...

by Admin / 04-08-2021 12:31:39pm
தமிழக அரசு பெரிதும் உறுதுணையாக இருந்தது... தமிழக வீராங்கனை பவானி தேவி பேட்டி...



டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல தமிழக அரசு பெரிதும் உறுதுணையாக இருந்ததாக, வீராங்கனை பவானி தேவி தெரிவித்துள்ளார்.

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழகம் சார்பில் வாள்வீச்சு போட்டியில் பங்கேற்ற தமிழக வீராங்கனை பவானி தேவி சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்த பின்

, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டோக்கியோ ஒலிம்பிக்கை முடித்து சென்னை திரும்பியதாகவும்,விளையாடியதை முதலமைச்சர் பார்த்து பாராட்டினார் என்றும் கூறினார்.

மேலும், இது என்னுடைய முதல் ஒலிம்பிக் போட்டி என கூறிய அவர்,தமிழகம் சார்பில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், என்னை மட்டுமல்லாமல், என் தாயாரையும் முதலமைச்சர் பாராட்டியது மகிழ்ச்சியளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலமைச்சருக்கு என்னுடைய வாள் பரிசாக வழங்கினேன் என்றும், அதற்கு முதல்வர் அடுத்த முறை விளையாடுவதற்கு இது உறுதுணையாக இருக்கும் என அதை மீண்டும் எனக்கே அளித்தார் எனவும் கூறினார்.
 
டோக்கியோ ஒலிம்பிக் செல்ல கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசு எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்ததாகவும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவும் உறுதுணையாக பல உதவிகளை செய்ததாகவும் குறிப்பிட்டார்.

நான் ஏற்கனவே மின்சாரத்துறையில் பணியாற்றி வருவதால், மின்சாரத்துறை அமைச்சரையும் சந்திக்க உள்ளதாக கூறிய அவர், மத்திய அரசிடம் இருந்து பல்வேறு வாய்ப்புகள் வருகிறது. இருப்பினும் தமிழகத்தில் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம் என்றும், பதவி உயர்விற்காக பேசியுள்ளதாகவும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்துள்ளதாகவும்

 

Tags :

Share via