கோலாகலமாக தொடங்கிய பாராலிம்பிக் போட்டி... இந்திய அணிக்கு தேக்சந்த் தலைமை தாங்கினார்...
மாற்றுத் திறனாளிகளுக்கான 16-வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக தொடங்கியது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், நேற்று 16-வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் உற்சாகமாக தொடங்கியுள்ளது
. 164 நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள போட்டியில், இந்தியா சார்பில் இதுவரை இல்லாத அளவுக்கு தடகளம், வில்வித்தை, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட ஒன்பது வகையான விளையாட்டுகளில் 54 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் தகுதிச்சுற்றுகள் ஆகஸ்ட் 25, 26 மற்றும் 27-ஆம் தேதிகளிலும், காலிறுதி மற்றும் இறுதிப்போட்டி முறையே ஆகஸ்ட் 28 மற்றும் 29 தேதிகளிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.
டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் மாரியப்பன் தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்த்து இருந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால், மாரியப்பனுக்கு பதிலாக ஈட்டி எறிதல் வீரர் தேக்சந்த் தேசிய கொடி ஏந்தி சென்றார். மாரியப்பன் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :