போலி பில் மூலம் வரி ஏய்ப்பு : கைதான அரசியல்  பிரமுகர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்

by Editor / 17-08-2021 06:55:30pm
போலி பில் மூலம் வரி ஏய்ப்பு : கைதான அரசியல்  பிரமுகர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்

 போலி பில்கள் தயாரித்து கொடுத்து ஜி.எஸ்.டி வரி ஏய்ப் பு செய்த  நெல்லையை சேர்ந்த அரசியல்  பிரமுகர் கைது செய்யப்பட்டு  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்துச் சென்ற போது உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் அங்கிருந்து  தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கேடிசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் இவரது மகன் பெரிய ராஜா என்ற  எஸ்.பி ராஜா   பாகிஸ்தான் உள்ளிட்ட சில வெளிநாடுகளில் இருந்து சிமெண்ட் இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்துள்ளார் இவர் GSTயில்  உள்ளீடு வரி தொடர்பாக பலருக்கு  போலி பில்கள் தயாரித்து கொடுத்ததாக தெரிகிறது அதில் அரசுக்கு பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பும் மோசடியும் நடந்ததாக  கூறப்படுகிறது. 
இந்த நிலையில்  வணிக வரித்துறை ஜி.எஸ்.டி பிரிவு அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையில் இறங்கினர் அதில் எஸ்.பி.ராஜா   6 கோடியே 50 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது   இந்நிலையில் நெல்லை மாவட்ட வணிக வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் ராஜா மீது அரசுக்கு  இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்து அவரை  கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதை அடுத்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் முன்பு மருத்துவ பரிசோதனை செய்ய  திருநெல்வேலி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு எஸ்பி ராஜா அழைத்துச் செல்லப்பட்டார். தனக்கு நெஞ்சு வலிப்பதாக அவர் அதிகாரிகளிடம் கூறியதாக தெரிகிறது  அப்போது ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாகவும் உடல்நிலை குறைவு ஏற்பட்டதாகவும் மருத்துவரிடம் தெரிவித்த நிலையில்  மருத்துவமனையில் உள் நோயாளியாக அவர் அனுமதிக்கப்பட்டார்.
 காவல்துறை பாதுகாப்பில்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பி ராஜா மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிவிட்டார்   இதுகுறித்து வணிக வரித்துறை அதிகாரிகள்  நெல்லை ஹைகிரவுண்ட்  காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்  வழக்கு பதிவு செய்து தப்பியோடிய எஸ் பி ராஜாவை போலீசார் தீவீரமாக தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories