by Editor /
30-06-2023
08:22:28am
உத்தரபிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தில் இன்று நள்ளிரவு பயங்கர சாலை விபத்து நடந்தது. அதி வேகமாக வந்த பொலிரோ ஜீப், நின்று கொண்டிருந்த லாரி மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். விபத்தின் போது காரில் 8 பேர் இருந்தனர். அவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :
Share via