by Editor /
29-06-2023
09:13:40pm
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கியது சட்டவிரோதம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு விரோதமாக ஆளுநர் செயல்படுகிறார் என அவர் தெரிவித்துள்ளார். ஆளுநரின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மாநில அரசுடன் மோதலை உருவாக்குகிறார் தமிழக ஆளுநர், சர்வாதிகாரி போல் நடந்துகொள்கிறார் என்று தெரிவித்துள்ளார். அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்டுள்ளதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
Tags :
Share via