by Editor /
29-06-2023
09:03:16pm
தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். ஊழல் தொடர்பான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதை குறிப்பிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். வேலைவாங்கி தருவதாக கூறி பணமோசடி உள்ளிட்ட குற்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ளார் செந்தில் பாலாஜி, எனவே அவர் அமைச்சர் பதவியில் நீடித்தால் விசாரணை பாதிக்கப்படும் என்பதால் நீக்கப்பட்டுள்ளார் என ஆளுநர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமலாக்கத்துறை வழக்கை எதிர்கொண்டுள்ள செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
Tags :
Share via