வாட்ஸ்-அப்பில் லிங்க் அனுப்பி ரூ. 1. 26 லட்சம் மோசடி

by Staff / 20-04-2023 04:09:33pm
வாட்ஸ்-அப்பில் லிங்க் அனுப்பி ரூ. 1. 26 லட்சம் மோசடி

சென்னை புழல் அருகே காவாங்கரை மாரியம்மன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார், இவர் சென்னை காவல்துறையில் நுண்ணறிவு பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.இவரது வாட்ஸ்-அப் செயலியில் வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஸ்டேட்மெண்ட் பார்ப்பதற்கு இந்த இணைப்பை பயன்படுத்துங்கள் என குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த இணைப்பிற்குள் சென்ற ராஜ்குமார் அந்த செயலியல் கேட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் ராஜ்குமாரின் கிரெடிட் கார்டில் இருந்து சிறிது சிறிதாக என ரூ. 70 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.அப்போதுதான் மோசடி இணைப்பில் சென்று பணத்தை இழந்த ராஜ்குமார் தனது பணத்தை மீட்டு தருமாறு புழல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதை போன்று புத்தகரம் ரேவதி நகரை சேர்ந்தவர் சபரிநாதன் என்பவரின் வாட்ஸ்-அப் லிங்க் அனுப்பி மோசடி கும்பல் ரூ. 56,000 சுருட்டியுள்ளது. இருவேறு சம்பவம் குறித்து புழல் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories