விண்வெளிக்கு குரங்குகளை ஆய்வுக்காக அனுப்ப சீனா திட்டம்

by Staff / 07-11-2022 03:13:09pm
விண்வெளிக்கு குரங்குகளை ஆய்வுக்காக அனுப்ப சீனா திட்டம்

விண்வெளியிலுள்ள  சீனா விண்வெளி நிலையத்திற்குள் குரங்குகளை அனுப்பி அதன் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க முறையை ஆராய்ச்சி செய்ய அந்த நாடு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 பூஜ்ஜிய புவியீர்ப்பு சூழலில் குரங்கின் வளர்ச்சி மற்றும் இனப்பெருக்க முறையை தெரிந்து கொள்ள இந்த ஆராய்ச்சி உதவும் என்றும் விலங்குகளை கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்வதன் மூலம் மனிதர்கள் விண்வெளியில் வாழ தேவையான கூற்றுக்களை தெரிந்து கொள்ள முடியும் என்றும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories