50 நாள்களுக்கான எரிபொருள் கையிருப்பு தற்போது உள்ளது -இந்தியன் ஆயில் நிறுவனம் .
இந்தியன் ஆயில் நிறுவனம் சமூக வலைதளங்களில் பரவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. இந்தியாவில் போதுமான அளவு பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளது தட்டுப்பாடு ஏற்படும் என்ற செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றது. எரிபொருள் விநியோகம் மற்றும் வினியோக கட்டமைப்பு எந்தவித தடையும் என்று இயல்பாக செயல்பட்டு வருகின்றன. .தமிழ்நாட்டிலும் அனைத்து எரிபொருளும் முனையங்கள் மற்றும் விநியோக மையங்களில் போதிய கையிருப்பு உள்ளது ஒரு சில இடங்களில் மக்கள் அதிகப்படியான எரிபொருளை வாங்க முண்டியடித்ததால் தற்காலிக விநியோக சீர்குலைவு ஏற்பட்டது. அது தற்போது சரி செய்யப்பட்டு வருகிறது. தேவையற்ற அச்சத்தின் காரணமாக பெட்ரோல் பங்குகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்குமாறும் அதிகாரப்பூர்வ தகவல்களைமட்டுமே நம்புமாறும் நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .மத்திய அரசின் தகவல் படி நாட்டுக்கு தேவையான சுமார் 50 நாள்களுக்கான எரிபொருள் கையிருப்பு தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :



















