விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் திரளும் ஆதரவாளர்கள்.

by Editor / 11-04-2025 03:03:39pm
விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின்  வீட்டில் திரளும்  ஆதரவாளர்கள்.

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு வனத்துறை அமைச்சருமான பொன்முடியின் வீட்டில் ஆதரவாளர்கள் திரண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் பொன்முடியின் பேச்சு சர்ச்சைக்குரியதாக அமைந்ததால் கட்சியின் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஆன கனிமொழி கருணாநிதி இன்று காலை அவரது சமூக வலைதள பக்கத்தில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து திமுக கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் கழக துணை பொது செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் பொன்முடியை விடுவித்தார். இந்த நிலையில் விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடியின் வீட்டில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சரின் ஆதரவாளர்கள் திரண்டு வருகின்றனர். வழக்கத்தை விட கூடுதலாக அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் திரளும் ஆதரவாளர்கள்.

Share via