திமுக தலைவரிடம் வாழ்த்துப்பெற்ற திருச்சிசிவா

தமிழ்நாடு முதலமைச்சரும்,திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட திருச்சி சிவா, எம்.பி., நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதுபோது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதிமாறன், எம்.பி., ஆகியோர் உடனிருந்தனர்.
Tags : திமுக தலைவரிடம் வாழ்த்துப்பெற்ற திருச்சிசிவா