அமைச்சர் துரைமுருகன் பதவிக்கும் ஆபத்து..? - திடீரென வருத்தம் தெரிவித்து அறிக்கை!

by Editor / 11-04-2025 02:58:20pm
அமைச்சர் துரைமுருகன் பதவிக்கும் ஆபத்து..? - திடீரென வருத்தம் தெரிவித்து அறிக்கை!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அரைக்கையில் தெரிவித்துள்ளதாவது:மாற்றுத் திறனாளிகள் குறித்து நான் பயன்படுத்திய வார்த்தைக்கு நிபந்தனையற்ற வருத்தம் கோருகிறேன்.

இயற்கையிலேயே உடலில் ஏற்பட்ட குறைபாடு உடையவர்களை அருவருக்கும் பெயர் கொண்டு, அவர்களை அழைத்து வந்ததை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கருணை உள்ளத்தோடு "மாற்றுத் திறனாளிகள்"" என்று பெயரிட்டு அழைத்தார். அதையே நாங்களும் பின்பற்றி வருகிறோம்.

அப்படிப்பட்ட நானே, ஒரு பொதுக்கூட்டத்தில் பேச்சின் வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை பழைய பெயரையே கொண்டு உச்சரித்து விட்டேன் என்று கழகத் தலைவர் தளபதி அவர்கள் என் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, நான் அதிர்ச்சியும் - வருத்தமும் அடைந்தேன் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
 

 

Tags : அமைச்சர் துரைமுருகன் பதவிக்கும் ஆபத்து..? - திடீரென வருத்தம் தெரிவித்து அறிக்கை!

Share via

More stories