பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு..?

by Editor / 11-04-2025 02:53:52pm
பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு..?

தமிழக பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது விருப்ப மனு தாக்கல் செய்ய நயினார் நாகேந்திரன் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில், நயினார் நாகேந்திரனுக்கு மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய கட்சித் தலைமை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு..?

Share via