மாரிமுத்து மறைவு - நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாரிமுத்துவுடன் பணியாற்றிய, சக திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மாரிமுத்து இறுதியாக வெளியான ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :



















