“நான் போராட்டத்தில் இறங்குவேன்” - நடிகர் தாடி பாலாஜி

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேசியதற்கு நடிகர் தாடி பாலாஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “வேல்முருகன் பேசியதை தனிமனித தாக்குதலாகத்தான் பார்க்கிறேன். எல்லாரும் விஜய்யை அண்ணனாக பார்க்கிறார்கள். அதனை கொச்சைப்படுத்தி பேசுவது மிகப்பெரிய தவறு. இனி தலைவர் விஜய் குறித்து வேல்முருகன் தவறாக பேசினால் நான் போராட்டத்தில் இறங்குவேன்” என ஆவேசமாக பேசியுள்ளார்.
Tags :