மும்பையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த ஏழு பேர் கொண்ட கும்பல் கைது

by Editor / 24-07-2022 03:41:59pm
மும்பையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த ஏழு பேர் கொண்ட  கும்பல் கைது

மும்பையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த 7 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த 25 ஐபோன்கள் உள்பட 78 செல்போன்களை பறிமுதல் செய்தனர். மன்குறிடில்  ஒரு நபரின் செல்போன் திருடப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார் திருடப்பட்ட செல்போனை வாங்கி ஒரு நபரை பிடித்தனர். அவர் கொடுத்த தகவலின்படி இதில் தொடர்புடைய 6 பேரை கைது செய்தனர். திருடிய செல்போன்களை முகவர் மூலம் உத்தரப்பிரதேசம் கொல்கத்தா நேபாளம் ஆகிய இடங்களில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.

 

Tags :

Share via

More stories