மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை

by Staff / 02-04-2023 12:24:17pm
மாணவர்களின் தகவல்கள் திருடி விற்பனை

சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி துறை அலுவலகம் மூலம், மாநிலத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அதேபோல, தற்போது நடைபெறும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். இதில் தேர்ச்சியாகும் மாணவர்கள், அடுத்தக்கட்டமாக உயர்கல்விக்கான பல்கலை, கல்லூரிகளில் சேர்வது வழக்கம். தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் போன்ற படிப்புகள் உள்ளன.எனினும் மாணவர்களின் முதல் தேர்வாக, இன்ஜினியரிங் படிப்பே உள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் அதிகளவில் இன்ஜினியரிங் கல்லூரிகள் உள்ளன. 12ம் வகுப்பு தேர்வுக்கான முடிவுகள் மே 5ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் தனியார் கல்லூரிகள் மாணவர்-மாணவி சேர்க்கைக்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளிக்கல்வி துறையில் இருந்து மாணவர், மாணவிகளின் தகவல்கள் திருடப்பட்டு, தனியார் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக்குகள் விற்கப்படுவதாக புகார் வெளியானது. குறிப்பாக, ஒரு மாணவரின் விவரம் ரூ. 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via