முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது தாக்கமுயற்சித்த:4 பேரும் - சொந்த ஜாமீனில் விடுவிப்பு.

by Editor / 12-11-2024 10:31:44am
 முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது தாக்கமுயற்சித்த:4 பேரும் - சொந்த ஜாமீனில் விடுவிப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மங்கல்ரேவு பகுதியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது அமமுகவினர் தாக்குதல் நடத்த முயற்சித்து உடன் வந்த அதிமுக நிர்வாகி தினேஷ்குமார் என்பவரை தாக்கிய வழக்கில், சேடபட்டி போலீசார் அமமுக சேடபட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, அமமுக உறுப்பினர் பழனிச்சாமி, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த குபேந்திரன், அஜய் என்ற 4 பேரை கைது செய்து உசிலம்பட்டி நடுவர் மற்றும் குற்றவியல் நீதிமன்ற எண் 2 நீதிபதி சத்தியநாராயணனிடம் ஆஜர் படுத்திய நிலையில், புகார்தாரரான காயமடைந்த தினேஷ்குமார் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதை காரணமாக கட்டி, 4 பேரையும் சொந்த ஜமீனில் விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

Tags : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

Share via