பாஜக கூட்டணியில் மீண்டும் இணையும் சந்திரபாபு நாயுடு

by Staff / 07-02-2024 04:03:04pm
பாஜக கூட்டணியில் மீண்டும் இணையும் சந்திரபாபு நாயுடு

2019 மக்களவை தேர்தலுக்கு முன் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பா.ஜ.க தலைவர்களுடன் டெல்லியில் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க தலைவர்களை சந்திக்கலாம் என்று கூறப்படுகிறது. சந்திரபாபு நாயுடு மாலை 5 மணிக்கு டெல்லி சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனாவுடன் கூட்டணி என தெலுங்கு தேசம் கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது. டெல்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஜனசேனா கலந்துகொண்டது. முன்னதாக, மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என குற்றம்சாட்டி டி.டி.பி கட்சி, பா.ஜ.க உடனான உறவை முறித்திருந்தது.

 

Tags :

Share via