கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் குவிந்த பெண்கள் அருவியில் புனித நீராடினர்.

by Editor / 20-11-2023 06:57:04am
 கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் குவிந்த பெண்கள் அருவியில் புனித நீராடினர்.

கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் தமிழகம் முழுவதும் சோமவாரமாக இந்து மக்களால் புனிதமான தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் பெண்கள் தங்களின் மாங்கல்ய பலத்திற்கும் மற்றும் வேண்டுதல்களை நிறைவேற்றவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்வர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சோம வாரம் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் தென்காசி மாவட்டத்தில் தென்பொதிகை மலை அடிவாரத்தில் அமைந்துள்ள புனிதமான ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் குற்றாலத்தில் உள்ள அருவியில் அதிகாலை முதல் பெண்கள் வந்து நீராடி  வழிபட்டு செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த 17ஆம் தேதி கார்த்திகை மாதம் துவங்கியது. இதில் முதல் திங்களான இன்று குற்றாலம் அருவியில் நீராடி பெண்கள் தங்களின் மாங்கல்ய பலத்திற்காகவும் குடும்பம் மகிழ்ச்சியாகவும்,செல்வம் நிறைந்து நோயற்ற வாழ்வு வேண்டியும், இறைவனிடம் பிரார்த்தனை செய்தனர். மேலும் குற்றாலம் குற்றால நாதர் சுவாமி கோவில் அருகே உள்ள செண்பக விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

 சோமவாரத்தை முன்னிட்டு குற்றாலத்தில் பெண்கள் அதிகாலை 3 மணி முதல் குவியத் தொடங்கினர் இதன் காரணமாக குற்றாலம் பேரருவியில் பெண்களுக்கு மட்டும் குளிப்பதற்கு அதிகாலை முதல் அனுமதி அளிக்கப்பட்டது. ஆண்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை ஆண்கள் குளிக்கும் பகுதியிலும் பெண்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதால் குற்றாலம் அருவிக்கரையில்  பெண் காவலர்கள் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.பெண்கள்  ஏராளமானோர் வாகனங்களில் குற்றாலத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர். சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் குற்றாலத்தில் ஐயப்ப பக்தர்கள் உடைய கூட்டத்திற்கு அதிகமாக பெண்களின் கூட்டம் அதிகாலையில் இருந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. செண்ப விநாயகர் ஆலயத்தை சுற்றி உள்ள நவக்கிரகங்களுக்கு பழங்கள் , மஞ்சள் பொடி போட்டு,பாலபிஷகம் செய்து  வெற்றிலை பாக்கு உள்ளிட்டவைகள் வைத்து பெண்கள் சூடம் மேற்றி சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர்.

 கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் குவிந்த பெண்கள் அருவியில் புனித நீராடினர்.
 

Tags : குற்றாலத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் குவிந்த பெண்கள் அருவியில் புனித நீராடினர்.

Share via