தமிழக வாக்காளர்களாகும் வெளிமாநிலத்தவர்கள்-திருமாவளவன்.

by Staff / 02-08-2025 07:58:18am
தமிழக வாக்காளர்களாகும் வெளிமாநிலத்தவர்கள்-திருமாவளவன்.

 சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் காரணமாக பீகாரைச் சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளனர்.நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தம் தீவிரமாக மேற்கொள்ளப்படும் பட்சத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் 70 லட்சம் வெளி மாநிலத்தவர்கள், இங்கு வாக்காளர்களாகும் வாய்ப்பு ஏற்படும். தமிழ்நாட்டின் வாக்காளர்களில் 10% வெளிமாநிலத்தவர்களாக மாறினால் அரசியல் போக்கில் பெரிய தாக்கத்தை உண்டாக்கும்.

இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், “லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக தமிழ்நாட்டில் சேர்ந்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிப் போகும். எனவே எந்த மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் துணிந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

 

Tags : தமிழக வாக்காளர்களாகும் வெளிமாநிலத்தவர்கள்-திருமாவளவன்.

Share via