ஆபாச படத்தில் நான் நடித்தேனா? நடிகை ஆவேசம்
ஆந்திர மாநில அமைச்சர் மற்றும் நடிகை ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி கூறியுள்ளார். இந்த கருத்து சர்ச்சையான நிலையில், அமைச்சர் ரோஜா இன்று செய்தியாளர்களை சந்தித்து, "நான் நிர்வாண படத்தில் நடித்ததாக தெரிவித்து சித்ரவதை செய்து வருகிறார்கள். எனது குணத்தை மதிப்பிடுவதற்கு நீங்கள் யார்?. தெலுங்கு தேசம் கட்சியினர் பெண்களை விளையாட்டுப்பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் மீது நான் மானநஷ்ட ஈடு வழக்கு தொடுக்கவுள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
Tags :