ஒயின் பருகுவது கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்

by Admin / 17-02-2022 04:25:25pm
ஒயின் பருகுவது கொரோனாவில் இருந்து பாதுகாக்கும்

மது அருந்துபவர்களை கொரோனா தாக்கது என மதுப்பிரியர்கள் வேடிக்கையாக சொல்வதுண்டு, ஆனால் அவர்களின் கூற்றுக்கு ஏற்றார் போல் உள்ளது சமீபத்தில் ஆய்வின் மூலம் ஆய்வாளர்கள் வெளியிட்ட முடிவு. 

ஊட்டச்சத்தியல் குறித்த பிரபல இதழில் ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் அதன் கண்டுபிடிப்புகளுக்காகவே கவனிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 

இதன்படி வாரம் 1 முதல் 4 கோப்பை சிவப்பு ஒயின் பருகுவதினால் கொரோனா தொற்று பாதிப்பின் அபாயம் 10 சதவீதம் அளவுக்கு குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளையில் வாரம் 5 முறை அல்லது அதற்கு மேற்பட்ட கோப்பைகள் சிவப்பு ஒயின் அருந்துவதால் கொரோனா அபாயம் 17 சதவீதம் வரை குறையும் என கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் வெள்ளை ஒயினும், சாம்பைனும் கூட நன்மை அளிப்பவையாக இருந்தாலும் அவற்றின் பலனானது சிவப்பு ஒயினுடன் ஒப்பிட்டு பார்க்கையில் குறைவு தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். 

இந்த ஆய்வு முடிவை மதுகோப்பை பிரியர்கள் கையில் ஏந்தி கொண்டாட வேண்டியது தான் என மதுப்பிரியர்கள் உற்சாகம் அடைய வேண்டாம். பீயர் என சொல்லப்படும் பானத்தை அருந்துவதால் கொரோனா தொற்றின் அபாயத்தை 7 மடங்கு அதிகரிப்பதாக சொல்கின்றனர். 

இது தவிர குறிப்பிட்ட எண்ணிக்கையிலான் பங்கேற்பாளர்கலௌ கொண்டு நடத்தப்பட்ட ஆய்வினை அப்படியே நடைமுறை வாழ்க்கையில் பொருத்திப் பார்க்க முடியாது எனவும், ஆல்கஹால் கொண்ட பானங்களினால் ஏற்பட்டு வரும் தீமையே அதிகம் என மற்றொரு தரப்பு விஞ்ஞானிகள் வாதாடுகிறார்கள். 

இது எல்லாம் ஒரு புறம் கூறிக் கொண்டு போகட்டும் நமக்கெதுக்கு தடுப்பூசி  முகக்கவசம், கிருமிநாசினி, சமூக் இடைவெளி என கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பான கவசங்களையே நம்புவது நலம்

 

Tags :

Share via