மாணவர்களுக்கு போதைமாத்திரை என்றுகூறி தூக்க மாத்திரையை வழங்கிய நபர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் தென்காசி மின்வாரியம் அமைந்துள்ளது வாலிபன் பகுதி இந்த பகுதியில் சில சிறுவர்கள் மயங்கிய நிலையில் 26 ஆம் தேதி அன்று மாலையில் கிடப்பதாக தென்காசி காவல்துறை ஆய்வாளர் பாலமுருகனுக்கு தகவல் கிடைக்கவே அவர் போலீசார் குழுவினருடன் விரைந்து சென்று அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார் அப்பொழுது 16 வயது மதிக்கத்தக்க நான்கு சிறுவர்கள் மயங்கிய நிலையில் கடந்துள்ளனர் இதனை தொடர்ந்து உடனடியாக நான்கு சிறுவர்களையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்தனர்,இதன் பெயரில் சிறுவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுவர்கள் பள்ளிமாணவர்கள் என்பதும் தற்போது விடுமுறை என்பதால் ஆற்றில் குளிக்க வந்து செல்வதும் ஆற்றிற்கு குளிக்கும் செல்லும்பொழுது தென்காசி எல் ஆர் எஸ் பாளையம் பகுதியைச் சேர்ந்த வேலுமணி மகன் காசிராஜன் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர் தனியார் மெடிக்கல் ஷாப்பில் பணி புரிந்து வருகிறார். இவர் சிறுவர்களுக்கு போதை மாத்திரை என்ற பெயரில் தூக்க மாத்திரையை வழங்கி உள்ளார். இந்த தூக்க மாத்திரையை சிறுவர்கள் போதை மாத்திரை என நினைத்து உட்கொண்டுள்ளனர். இதன் காரணமாக மாணவர்கள் மயங்கி சரிந்துள்ளனர் என்று தெரிய வரவே கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் காசிராஜன் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Tags :