தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்- தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து தேமுதிக ..திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சந்தித்து தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.. தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா எம்பி பதவி வழங்க திமுக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடுவார் என்றும் தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்ய விரைவில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். தேமுதிக 20 தொகுதிகள் வரை கோாியுள்ளநிலையில் 7 முதல் 10 தொகுதி வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது. விஜயகாந்த் 2005-ல் கட்சி ஆரம்பித்ததில் இருந்து திமுக உடன் கூட்டணி வைக்கப்படாத இந்த நிலையில் இப்பொழுது முதல் முறையாக கூட்டணி அமைந்துள்ளது. இது குறித்து பிரேமலதா விஜயகாந்த் கூறும் போது இந்த கூட்டணி 2016 அமைந்திருக்க வேண்டியது என்றும் மறைந்த தலைவர் விஜயகாந்த் என விருப்பப்படியே இது தற்போது நடந்துள்ளதாகவும் கூறினார்.
Tags :


















