சிறுவனை கடித்த நாய்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு

by Staff / 11-06-2024 04:55:51pm
சிறுவனை கடித்த நாய்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு

சென்னையை அடுத்த புழலில் கடந்த 1-ஆம் தேதி சாலையில் நடந்து சென்ற 12 வயது சிறுவனை, ராட்வைலர், பாக்ஸர் இன இரண்டு வளர்ப்பு நாய்கள் கடித்து குதறியது. இதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, 2 நாய்களையும் மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்ற நிலையில் அடுத்தடுத்த நாட்களில் 2 நாய்களும் உயிரிழந்துள்ளது. நாய்களுக்கு பிரேத பரிசோதனை செய்ததில் ரேபிஸ் நோய் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதனால், நாய்களால் காயமடைந்த சிறுவனுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

 

Tags :

Share via