புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்க வானிலை ஆய்வு மையம் அறிவுரை.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வலுவிழந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்பட்ட 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை இறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்க வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இன்று காலை 10 மணி வரை ராமநாதபுரம், புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்புள்ளது.அடுத்த 4-5 நாட்களில் மீண்டும் தமிழக கடற்கரையை நோக்கி நகரும். டிச., 23 முதல் 27 வரையிலான காலக்கட்டத்தில் வட தமிழகத்தின் சில பகுதிகளில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது.
Tags : புயல் எச்சரிக்கை கூண்டுகளை இறக்க வானிலை ஆய்வு மையம் அறிவுரை.