தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 4 லட்சம் மின்கம்பங்கள்தயார் நிலையில் உள்ளது.

தமிழ்நாடு மின் பகிர்மான கழக நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருவதையொட்டி முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திருக்கோவிலுக்குள் பக்தர்கள் அதிகம் கூடுவதால் மின் கம்பங்களும் மின் கம்பிகளும் பாதுகாப்போடு வைத்துக் கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கிய அவர், திருக்கோவிலுக்குள் மின்சார பொருட்களை பத்திரமாக கையாள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் கலந்துகொண்டு வழிபட்டு பின்னர் கோவில் கொடிமரம் அருகே கீழே விழுந்து அண்ணாமலையாரை வணங்கிய அவருக்கு திருக்கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்.உலக பிரசித்தி பெற்ற ஸ்தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் சூழலில் முதற்கட்ட கான்கிரீட் சாலை அமைக்கும் பணியில் 3 கோடி மதிப்பீட்டில் பூமிக்கு அடியில் கேபிள் புதைக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளதாகவும் தொடர்ந்து இரண்டாவது கட்டமாக தற்பொழுது 1.1 கிலோமீட்டர் தொலைவிற்கு 3 கோடி மதிப்பீட்டில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரிப்பால் தற்பொழுது சன்னதி தெரு உள்ளிட்ட பக்தர்கள் அதிகம் கூடும் வீதிகளில் 3.3 கோடி மதிப்பீட்டில் பூமிக்கு அடியில் கேபிள் புதைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஓரிரு தினங்களில் இப்பணிகள் தொடரும் என்றார்.
14 கிலோ மீட்டர் தொலைவு கொண்டு கிரிவலப் பாதையில் 9 கோடி மதிப்பீட்டில் பூமிக்கு அடியில் கேபிள் புதைக்கும் பணிக்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும் விரைவில் அந்த பணிகளும் தொடங்கும் என்றார்.
பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் குறிப்பாக 4 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறியவர் பொதுமக்களும் மழைக் காலங்களில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Tags : புயல்மழை மின் கம்பங்கள் சேதம்