போலி மருத்துவர் கைது

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆக்னெஸ்ட் கேத்தரின். இவர் அங்கு மருத்துவராக இருந்து வருகிறார். இவரிடம் ஊசிப்போட சென்ற சிறுவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுக் குறித்து தகவறிந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இவர் ஒரு போலி மருத்துவர் என தெரிய வந்தது.
உடனே களத்தில் இறங்கிய போலீசார் இவரை அதிரடியாக கைது செய்து, கேத்தரின் வீட்டை சோதனையிட்டனர். அதில் அவரது வீட்டிலிருந்து 100 க்கும் மேற்பட்ட வலி நிவாரணிகள், காய்ச்சல் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Tags :