பூண்டி - வினாடிக்கு 18,000 கன அடி உபரி நீர் திறப்பு.

by Admin / 12-11-2021 05:14:29pm
பூண்டி - வினாடிக்கு 18,000 கன அடி உபரி நீர் திறப்பு.

பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 18,000 கன அடி உபரி நீர் திறப்பு...

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது

பூண்டி நீர்த் தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது.
 
இதுமட்டுமின்றி,  ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மம் பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்திற்கு வந்து கொண்டிருப்பதால், பாதுகாப்பு கருதி அணையிலிருந்து கடந்த நான்கு நாட்களாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 தற்போது, வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் அணையிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
 
 ஒதப்பை பாலம் மூழ்கும் நிலையில் உருவாகியுள்ளதால், திருவள்ளூரில் இருந்து உத்துக்கோட்டைக்கு  செல்லும் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பாலத்தின் இருபுறமும்  தடுப்புகள் அமைக்கப்பட்டு  காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வாகனங்களை திருப்பி அனுப்பி வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories