மேற்கு வங்க ரயில் விபத்து: நிவாரணம் அறிவிப்பு

by Staff / 17-06-2024 02:39:03pm
மேற்கு வங்க ரயில் விபத்து: நிவாரணம் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று  பயங்கர ரயில் விபத்து நடந்தது. இந்த விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்வதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via