பாஜக இருக்கும் இடம் தெரியாமல் போகும்

by Staff / 25-11-2023 02:41:36pm
பாஜக இருக்கும் இடம் தெரியாமல் போகும்

ராஜஸ்தான் தேர்தலில் பாஜக இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்று முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். ராஜஸ்தான் 200 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், சர்தார்புராவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்திய பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல் அசோக் கெலாட் கூறுகையில். "நடப்பது மாநில சட்டப்பேரவைத் தேர்தல், இது மோடியின் தேர்தல் அல்ல, ராஜஸ்தானில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். பாஜக தேர்தலுக்கு மட்டுமே வெளிவரும் கட்சி. நாளை முதல் ராஜஸ்தானில் பாஜக என்ற கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போகும்" என்றார்.

 

Tags :

Share via

More stories

Logo