இந்திய அரசியலமைப்பு சட்டம் - ஆளுநர் பேச்சு
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி சென்னை தரமணியில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக விழாவில், கலந்துகொண்டார். அப்போது ஆளுநர் பேசுகையில், இந்திய அரசியலமைப்பு சட்டம் முழுமை பெறாத ஆவணமாக உள்ளது. மிகுந்த அழுத்தங்களுக்கு இடையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறி உள்ளதா? என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது. நீதிமன்றங்களில் மட்டும் இல்லாமல் சட்ட பல்கலைக்கழகங்களிலும் அரசியல் அமைப்பு சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும். தற்போதைய காலத்தில் சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பது விலை உயர்ந்ததாக உள்ளது என்றார்.
Tags :



















